பிரான்சில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழா சர்வதேச புகழ் பெற்றதாகும். இதில் கலந்து கொள்வதையே பெருமையாக திரையுலகினர் கருதி வருகின்றனர்.
இந்தாண்டுக்கான 75-வது கேன்ஸ் திரைப்பட விழா வருகிற 17ம் தேதி தொடங்க இருக்கிறது.
இதில் இந்தியா சார்பில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், இசை அமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், கிராமப்புற இசையமைப்பாளர் மற்றும் பாடகர் மாமே கான், பாலிவுட் நடிகர் நவாஸூதீன் சித்திக், நடிகைகள் நயன்தாரா, பூஜா ஹெக்டே, தமன்னா, வாணி திரிபாதி, திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோஷி, நடிகர் மாதவன், இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இவர்கள் மத்திய தகவல் ஒலிப்பரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் குழுவாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்தியக் குழுவுக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பு கவுரவம் அளிக்கப்பட இருக்கிறது மேலும் மாதவன் நடித்துள்ள ராக்கெட்ரி திரைப்படம் கேன்ஸ் விழாவில் திரையிடப்பட இருக்கிறது.