இஸ்ரோ மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் தயார் நிலையில் உள்ளது – இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பகிர்ந்த முக்கிய தகவல்

இந்தியா செய்திகள் நிகழ்வுகள் பிரபஞ்சமும் நாமும் வரும் நிகழ்ச்சிகள்

இந்திய விண்வெளி ஆயிய்ச்சி நிலையம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. மனிதர்களை ஏழு நாட்கள் விண்வெளிக்கு அனுப்பி அவர்கள் அங்கேயே தங்கி சோதனை செய்து, பின்னர் பூமிக்கு அழைத்து வரும் திட்டம்தான் ககன்யான. அதற்கான தயாரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதுவரை நாம் சாட்டிலைட்களை மட்டுமே விண்வெளிக்கு அனுப்பி வந்தோம். இப்போது தான் முதல்முறையாக மனிதர்களை அனுப்புகிறது.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதில் பல கட்டுப்பாடுகள் தேவை. அதிநவீன தொழில்நுட்பங்கள் தேவை. அங்கு விண்வெளியில் இருக்கும் வீரர்களுக்கு பூமியில் இருப்பது போன்ற சீதோஷன நிலையையும் நாம் ஏற்படுத்த வேண்டும். இப்படி பல சவால்கள் உள்ளன.
குறிப்பாக அவர்கள் மீண்டும் பூமிக்கு திரும்பும் போது, உச்சபட்ச வெப்பத்தை தாங்கும் தொழில்நுட்பம் நமக்கு தேவைப்படுகிறது. மேலும், அவர்கள் பாதுகாப்பான இடத்தில் தரையிறங்க வேண்டும். இதற்காக பலதரப்பட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன. சோதனை அனைத்தும் முடிந்தவுடன். மனிதர்கள் இல்லாமல், முதலில் ரோபோக்களை விண்வெளிக்கு அனுப்பி சோதனை செய்வார்கள். அதில் இருந்து கிடைக்கும் டேட்டாக்களை ஆராய்ந்து பாதுகாப்பு உறுதி செய்தவுடன் மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவார்கள்’ என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *