கேரளாவில் கட்டப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான கண்ணாடி பாலத்தை அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் முகமது ரியாஸ் திறந்து வைத்தார்.
கேரளாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், இடுக்கி மாவட்டத்தில் உள்ள வாகமண் பகுதியில் தனியார் தொழில் முனைவோர்களுடன் இணைந்து கண்ணாடி பாலம் கட்டப்பட்டுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரத்து 600 அடி உயரத்தில் 5 அடுக்கு கண்ணாடிகளால் 3 கோடி ரூபாய் செலவில் 120 அடி நீளத்திற்கு கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கண்ணாடி பாலத்தில் ஒரே நேரத்தில் முப்பது பேர் நடக்கலாம் என்றும், ஒரு நபருக்கு 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணாடிப் பாலம் மட்டுமின்றி பல்வேறு சாகச விளையாட்டுகளும் இடம்பெற்றுள்ளன. இந்த கண்ணாடிப் பாலத்தை கேரளா சுற்றுலா மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் முஹம்மது ரியாஸ் திறந்து வைத்தார்.
