இளையோர் மத்தியில் பிரபலமான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிரும் சமூக வலைதளம்தான் இன்ஸ்டாகிராம். இன்று உலகளவில் மாதந்தோறும் சுமார் 1 பில்லியன் பயனர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்த நிலையில் இப்போது தங்கள் தளத்தை பயன்படுத்தி வர, பயனர்கள் அவர்களின் பிறந்த தேதியை கட்டாயம் கொடுத்தால் மட்டுமே தொடர் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டே வயதை சரிபார்ப்பது கட்டாயமாக்கப்படும் என இன்ஸ்டாகிராம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதனை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
இதிலிருந்து யாரும் தப்ப வாய்ப்பில்லை எனவும், போலியான பிறந்த தேதி கொடுத்தாலும் அதனை தங்கள் உயர் தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்து விட முடியும் எனவும் இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது. 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்துவதைத் தவிர்க்கும் நோக்கில் இதனை முன்னெடுத்துள்ளதாக இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது. இது இன்ஸ்டா பயனர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.