சர்வதேச யோகா தினம் -june 21

ஆரோக்கியம் செய்திகள்
                 இன்றைய தினம் 7 வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் "Be at home , Be with yoga " - வீட்டிலிருப்போம்‌ யோகாவுடன் இணைந்திருப்போம் என்பதாகும்.
                 யோகா ஆயக்கலைகள் 64 ல் ஒன்று எனவும் , அதன் வரலாறு 3000 ஆண்டுகளுக்கு முன்னதாக தோன்றியிருக்கலாம் என்பது நம் முன்னோர்களின் வரலாறுகளின் மூலம் அறியப்படுகிறது. பதஞ்சலி முனிவர் யோகாவின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
              யோகா என்பது உடல் , மனம் , ஆன்மா போன்றவற்றை ஒருங்கிணைக்கும்‌ சக்தியாக திகழ்கிறது.பொதுவாகவே யோகா என்றாலே கடினமான பயிற்சிகள் போலவும்‌, உடலில் பல்வேறு தோற்ற அமைப்புகளை ( YOGA POSES  ) செய்யவேண்டும் என பெரும்பாலானோர் நினைக்கின்றனர் .அது முற்றிலும் தவறு‌ , யோகாவில் பல்வேறு நிலைகள் உள்ளன
             1.யாமம் ( Yama )
             2.நியமம் ( Niyama )
             3.ஆசனம் ( Asana )
             4.பிரணயாமம் (Pranayama )
             5.பிரத்தியஹாரம் ( Pratyahara )
             6.தாரணம்‌( Dharana )
             7.தியானம் ( Dhyana )
             8.சமாதி ( samathi )

என எட்டு அங்கங்கள் உள்ளன.அவை ஒருவருடைய உடல் மன ஆரோக்கியத்தையும் அமைதியையும் பேண வழிவகை செய்கிறது‌.

           யோகா மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு கலை.எல்லா மதத்தவரின் சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் யோகாவின் தோற்ற அமைப்புகளை கொண்டுள்ளதை நாம் அறிவோம்.
           மேலும் யோகாவானது எல்லா வயதினரும் செய்வதற்கும் ஏற்றதாகவே உள்ளது.
            பெரும்பாலான தோற்ற நிலைகளை விலங்கினங்களின் தோற்றத்திற்கு ஒப்பாக இருக்கிறது.இதனை animal poses என கூறுகிறோம்.
           யோகா ஒர் கலை என்பதனை தாண்டி அது ஓர் அறிவியல். பல்வேறு உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு தருகிறது. யோகா மற்றும் இயற்கை மருத்துவம்‌ எனும் ஆயுஷ் மருத்துவ துறையில் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ பிரிவாகவே உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பெரும்பாலான மக்களால் பயன்படுத்திக்கொள்ள முடிகின்றது.
           மேலும் , இந்த கொரோனா தொற்று காலத்தில் மருத்துவமனைகளில் பிரணயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.
           இதில் நாம் அறிந்திராத விஷயம் ஒன்று இருக்கிறது , ஒரு குழந்தை ஒரு வயதை கடப்பதற்குள் தானாகவே குறைந்தபட்சம் 10 வகையான யோகா தோற்ற நிலைகளை செய்கிறதாம்

 யோகாவை இனம் , மதம் , மொழி , கலாச்சாரம் என எந்த வட்டத்திற்குள்ளும் அடைத்திடாது அறிவியலாய் பார்ப்போம். நம்மால் முடிந்த எளிய பயிற்சிகளை செய்வோம் , உடல் மற்றும் மனம் நலத்தை பேணிக்காப்பதற்கு உறுதி கொள்வோம்.

1 thought on “சர்வதேச யோகா தினம் -june 21

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *