ஐபிஎஸ் கிரிக்கெட் தொடர் 2023ல் லக்னோ அணியை வீழ்த்தியதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஐபிஎல் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற லக்னோ அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 57 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக மொயின் அலி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.