ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தார்.
இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் ராஜஸ்தான் அணியின் ரன் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தினர். ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தார். தேவ்தத் படிக்கல் 38 ரன்கள் எடுக்க கேப்டன் சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார். அஷ்வின், ஹெட்மேயர் தலா 20 ரன்களை எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணி ஆடியது. 20 ஓவர் முடிவில் 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 6 விக்கெட்டுகளை பறிகொடுத்த சென்னை அணியில் கடைசி வரை கேப்டன் தோனி, ஜடேஜா இருந்ததால் சென்னை நிச்சயம் வெற்றி பெறும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு பொய்த்தது. இது தோனி 200வது ஆட்டமாகும். அதுவும் சென்னையில் 200வது ஆட்டத்தில் சென்னையை வெற்றிப பெறச் செய்வார் என எதிர்பார்த்தது நடக்காமல் ஏற்மாற்றைத்தை தோனி தந்துள்ளார்.