ஐபிஎல் 2023; மும்பை அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி – ரசிகர்கள் உற்சாகம்

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் முதன்மை செய்தி விளையாட்டு

6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக வெற்றி பெற்றுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த நிலையில் பேட்டிங்கில் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து அதிர்ச்சியாக ஆட்டமிழந்து வெளியேறினர்.
மூன்று ஓவர்களின் முடிவிலேயே மூன்று விக்கெட்களை இழந்தது. ரோஹித் சர்மா, இஷாந்த் கிஸன் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் ஆட்டமிழந்தனர். அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ரன் எதுவும் எடுக்காமலேயே டக் அவுட் ஆனார். இதன் பின்னர் நிதானமாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 26 ரன்களில் ஜடேஜாவின் பந்தில் போல்ட் ஆனார்.
இதனைத் தொடர்ந்து வதேரா – டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி நிதானமாக விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை அதிகரித்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்த நேஹால் வதேரா 64 ரன்கள் எடுத்த நிலையில் பத்திரனா பந்தில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு மும்பை இந்தியன்ஸ் அணி 139 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னை அணிக்கு 140 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
140 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 30 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனை டேவோன் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஆகாஷ் மதவால் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து ரஹானே 21 ரன்கள் மற்றும் அம்பத்தி ராயுடு 12 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனை அடுத்து அணியின் கேப்டன் தோனி மற்றும் சிவம் தூபே ஆகியோர் களமிறங்கினர். இவர்கள் இருவரும் அதிரடியாக ஆடிய நிலையில் 139 ரன்கள் எடுத்து அணியின் எண்ணிக்கை சமன் செய்தனர். 15 பந்துகளுக்கு 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தோனி ஒரு ரன் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *