ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் சரிவர கிடைப்பதில்லை, குளறுபடிகள் நடப்பதாக ரசிகர்கள் குற்றச்சாட்டு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய 10 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்ததாக காண்பிப்பதாக ரசிகர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 6-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி, வருகின்ற 21-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியை நேரில் காண்பதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. அதன்படி, 1,500, 2,000 மற்றும் 2,500 ரூபாய் டிக்கெட்டுகள் மட்டும் கவுன்டரில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்தப்போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு அதிகாலையே ரசிகர்கள் குவிந்தனர். இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய 10 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்ததாக காண்பிப்பதாக ரசிகர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
கவுண்டரில் வழங்கப்படும் டிக்கெட்டுகளும் சரிவர வழங்குவதில்லை. குறைந்தது 10,000 டிக்கெட்டுகள் விற்பனை செய்ய வேண்டும் ஆனால் 5,000 டிக்கெட்டுகள் கூட வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர்.
சேப்பாக்கத்தின் மொத்த டிக்கெட் 33500. ஆன்லைன் மற்றும் டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. சி.எஸ்.கே.நிர்வாகம் தரப்பில் எவ்வளவு டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்படுகிறது. எவ்வளவு டிக்கெட் கவுண்டரில் வழங்கப்படுகிறது என்ற தகவல் கொடுக்க மறுக்கிறார்கள் எனவும் ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.