ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று முதல் குவாலிபையர் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
குஜராத் அணிக்கு எதிரான குவாலிஃபையர் முதல் போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த சிஎஸ்கே 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது.
சிஎஸ்கே வீரர் ருதுராஜ் 36 பந்தில் 50 ரன்கள் அடித்தார். இரண்டாவதாக களமிறிங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்ளுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வியை தழுவியது. குவாலிஃபயர் 2வது ஆட்டத்தில் மீண்டும் குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு செல்ல விளையாடும். இறுதிப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.