ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான மேட்ச்சில் 166 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய ஐதராபாத் அணி 9.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.
62 பந்துகளை மீதம் வைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 1 மணி நேரத்திற்குள்ளாக ஆட்டத்தை முடித்து வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பவர் ப்ளேயான 6 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 107 ரன்கள் குவித்திருந்தது. ஐபிஎல் தொடரில் 160 க்கும் அதிகமான ரன்களை 10 ஓவர்களுக்காக சேஸிங் செய்த முதல் அணி என்ற ரிக்கார்டை ஏற்படுத்தியுள்ளது சன்ரைசர்ஸ்.
ஐதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் தலா 8 பவுண்டரி, சிக்சருடன் 89 ரன்களும், அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்சருடன் 75 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி பாயின்ட்ஸ் டேபிளில் 3 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.