துபாய் அமீரகத்தில் புதிதாக நூலகம் ஒன்று கட்டப்பட்டது. முகமது பின் ராஷித் நூலகம் என்றுப் பெயரிடப்பட்ட இந்த நூலகம் புத்தக வடிவில் கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. துபாயில் கணிசமான தமிழர்கள் வாழ்கின்றனர். வேலை நிமித்தமாக துபாய் செல்லும் தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு அனைத்துவித வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது.
தற்போது இனிப்பான செய்தி என்னவென்றால் இசுலாமியர்களின் புனித நூளான திருகுர்ஆன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இநூலகத்தில் வைக்கப்படும். இது அங்கு வாழும் தமிழ் இசுலாமியர்களுக்கு, திருகுர்ஆனை தமிழில் படிக்க வேண்டும் என்று விரும்புவோர்களுக்கு இதுவொரு நல்ல வாய்ப்பு.
இந்த நூலகத்தின் சிறப்பு என்னவென்றால் தமிழுக்கென்று தனிப் பிரிவு உள்ளது. சென்னையைச் சேர்ந்த ஜான் டிரஸ்ட் இந்த மொழிபெயர்ப்பை அச்சிட்டு வெளியிடும்.