பாரம்பரியத்தை காக்க ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சொன்ன முக்கியமான சில விவாதங்கள் என்ன..!
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் தமிழக அரசு தனது எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்துள்ளது.
காட்சி விலங்குகள் பட்டியலில் மத்திய அரசு கடந்த 2011ஆம் ஆண்டு புலி, சிறுத்தை, சிங்கம், உள்ளிட்ட காட்டு விலங்குகளுடன்.
வீட்டில் மனிதர்களுடன் வாழும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் காளைகளையும் சேர்த்தது அப்போதைய காங்கிரஸ் அரசு.
இதனால் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த முடியாமல் போனது சில ஆண்டுகள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாமல் இருந்தது.
ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாநில அரசு அடிபணிந்து போர்க்கால அடிப்படையில் சட்டமன்றத்தில் புதிய சட்டத்தை இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்து. அதன் பிறகு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்று சட்டமாகஅங்கீகாரம் பெற்றது.
இதனால் 2017 ஆம் ஆண்டிற்கு பிறகு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Jallikattu case trial in Supreme Court Best 20 இந்த வழக்கு இப்பொழுது தீவிரமாக விசாரிக்கப்பட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எனினும் நீதிபதிகள் இந்த வழக்கு குறித்து சம்பந்தப்பட்ட நபர்கள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவித்தார்கள். அதன்படி தமிழக அரசு ஜல்லிக்கட்டு தொடர்பான எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்து உள்ளது.
அதில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடத்தில் மாவட்ட ஆட்சியாளர்கள் ஆய்வு செய்கிறார்கள்.
Jallikattu case trial in Supreme Court Best 20 இந்த களைகள் பற்றிய விழிப்புணர்வு இளைஞர்களிடம் அதிக அளவில் நிறைந்துள்ளது.
இந்த போட்டி தொடர்ந்து நடைபெற வேண்டும் இந்த போட்டி தமிழகத்தில் பாரம்பரியமாக நடைபெறும் போட்டி இதற்கு தடை விதிக்க கூடாது. மத்திய அரசு இதற்கு சரியான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசு தனது எழுத்துப்பூர்வ வாதத்தில் தெரிவித்துள்ளது.