அமெரிக்காவை சேர்ந்த லெசுச்சென் சிபிலிசுக்கி என்பவர் தான் இந்த நாளுக்கு முக்கிய காரணம்.
இந்நாளுக்கு ஒருஅங்கீகாரம் கொடுக்க ஐக்கிய நாட்டு சபையில் முன்வைத்தார். அவரின் முயற்சிக்கு 56 நாடுகள் கை கொடுத்துஇந்நாளை ஒரு அதிகாரபூர்வமான ஒரு நாளாக உருவாக்கினர்.
மிதிவண்டி என்பது ஒரு அத்தியாவசியமான பொருள் அது நம் ஆயுளை நீடிக்கும் ஒரு அருந்தா மருந்து என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த நாளின் முக்கிய நோக்கம் .உடலின் 75 சதவீத நோய்களுக்கு மருத்துவர் சொல்லும் முதல் மருந்து நடை பயிற்சி அல்லது மிதிவண்டி ஓட்டுதல் மட்டுமே. நீரழிவு நோய்க்கு முக்கிய மருந்தாகவே பார்க்க படுகிறது.பல நோய்களுக்கு மருந்து நம் உடலிலேயே இருக்கிறது என்கிறது அண்ட சாஸ்திரங்கள்.அதை வெளிக் கொண்டு வரும் தகுதி மிதிவண்டிக்கு தான் உண்டு.
17ஆம் நூற்றாண்டில் கண்டறியபட்டு இன்று நம்மோடு பிண்ணிப்பிணைந்து பயணிக்கிறது என்றால் அது மிகையல்ல.நம் உடலின் உந்து சக்தியை பயன்படுத்தி மிதிவண்டி செயல்படுகிறது. முதன் முதலில் கண்டறியப்பட்ட மிதிவண்டிக்கும் தற்கால மிதிவண்டிக்கும் அதிக வேறுபாடுகள் இருந்தது. மிதிவண்டியின் பின் சக்கரம் முன் சக்கரத்தை விட சிறிதாக இருந்ததால் காலப்போக்கில் அது சிரமமாக கருதப்பட்டது.நவீனகால மிதிவண்டி 1885 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.நவீன மிதிவண்டியின் தந்தை இங்கிலாந்தை சேர்ந்த சான் கெம்பு இசுட்டார்லி (John Kemp Starley) என்பவர் ஆவார்.இவர் இரண்டு சக்கரங்களும் ஒரே எடையுடன் இணையாக வைக்கப்பட்டு அதேபோல உந்துசக்தி மூலம் பற்சங்கிலியால் பின் சக்கரம் இணைக்க பட்டு மிதியடியால் அழுத்தி செயல்படுமாறு கண்டறிந்தார்.இக்காலத்திற்கு ஏற்றார்போல் மிதிவண்டி பல மாற்றங்கள் செய்யப்பட்டு இன்றும் பரவலான மக்களினால் பயன்படுத்தப்படுகிறது.
உலகில் முதல் முதலாக இங்கிலாந்து நாட்டில் தான் ஹெர்குலஸ் என்ற மிதிவண்டி நிறுவனம் தொடங்கப்பட்டது. ஒரு சில ஆண்டுகளில் அந்நிறுவனத்தின் மிதிவண்டி உலகில் உள்ள எல்லா மூலைகளிலும் பரவி எல்லா சாலைகளிலும் பயணிக்க தொடங்கியது.சுற்றுசூழல் மற்றும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காத ஒரு வாகனமாகவே பார்க்க படுகிறது.இது ஒரு பூஜ்ய எரிசக்தி வாகனம். நம்மோடு எப்போதும் பயணிக்கும் மிதிவண்டியை அதற்குரிய நாளில் நினைவு கூறுவோம்.