பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பைபருக்கு பக்கவாதம் தாக்குதல்

NRI தமிழ் டிவி சிறப்பு

இளம் வயதிலேயே உலகளவில் மிகவும் பிரபலமானவர் கனடா நாட்டைச் சேர்ந்த பாப் படகரான ஜஸ்டின் பைபர்.
யூடியூப் மூலம் தனது பாப் பாடல்களை வெளியிட்டு வந்த இவர் அதன் மூலம் பிரபலமடைந்து பிறகு பல நிகழ்ச்சிகளை நடத்தி ஏராளமான ரசிகர்களிடம் சென்றடைந்தார். இவரது பேபி பாடல் நம் நாட்டில் கூட பட்டி தொட்டியெங்கும் பிரபலம்.

இந்நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்காக வெளியிட்ட ஒரு பதிவில் கூறியிருப்பதாவது:
நான் எதிர்பாராவிதமாக அரிய வகை முக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்காக நீங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள். என்னால் என்னுடைய ஒரு கண்ணை சிமிட்ட முடியவில்லை. அதேபோல் ஒரு பக்கத்தில் சிரிக்க முடியவில்லை. ஒரு பக்க மூக்கின் துவாரமும் அசைக்க முடியாது. என்னுடைய முகத்தின் ஒரு பகுதி முழுவதும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, இதனால் என்னுடைய உலக இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளேன். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் பதற்றத்தில் உள்ளனர். ஆனால், உடல் அளவில் என்னால் எந்த நிகழ்ச்சியும் நடத்த முடியாத நிலை உள்ள போது என்ன செய்ய முடியும்?’’ இவ்வாறு அவர் வருந்தி தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல் தான் விரைவில் மீண்டு வந்து தன் பணியைத் தொடர்வதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.