முத்துவேல் கருணாநிதியின் 98வது பிறந்த நாள் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா

அரசியல் செய்திகள்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி அவர்களின் 98 வது பிறந்த நாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழகத்தில் பல இடங்களில் அவர் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. அவர் நினைவிடத்தில் தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
அவர் பிறந்தநாளை முன்னிட்டு பல நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பல குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதை கருத்தில் கொண்டு முதலமைச்சராக பதவியேற்ற பிறகு அனைத்து குடும்பத்திற்கும் ரூபாய் 4000 வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 2000 வழங்க பட்டது.இந்த மாதம் 2000 மற்றும் 13 மளிகை பொருட்களுடன் சேர்த்து நியாய விலை கடைகளில் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

மேலும் இந்த பெரும் தொற்றில் உயிரையும் பொருட்படுத்தாமல் களப் பணியாற்றி வந்த ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 184 காவல்துறையினருக்கு ஊக்கத் தொகையாக ரூபாய் 5000 வழங்கும் திட்டத்தையும்.

கொரோனா தொற்றின் காரணமாக அனைத்து கோயில்களும் மூடப்பட்டிருந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோவில்களில் சம்பளமின்றி வேலை செய்யும் அர்ச்சகர்கள் பூசாரிகள்,பட்டாச்சாரிகள் போன்ற இதர பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண நிதியாக ரூபாய் 4000 மற்றும் 10 கிலோ அரிசி 15 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

மேலும் அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயண திட்டத்தை தொடர்ந்து திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணங்களுக்கு அனுமதி அளிக்க பட்டது.

கிங்ஸ் இன்ஸ்டியூட் வளாகத்தில் 500 படுக்கை வசதிகளுடன் 250 கோடி ரூபாய் மதிப்பிலான பல்துறை மருத்துவமனை கட்டும் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது.

மாவட்டத்திற்கு ஆயிரம் மரக்கன்றுகள் மூலம் 32 மாவட்டத்திற்கு 32 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியும் துவங்கப்பட்டுள்ளது.

மேலும் திருவாரூர் மாவட்டத்தில் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நெல் சேமிப்பு கிடங்கு மற்றும் உலர்களன்கள் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.இதனால் மழை சேதங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணமாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது..

சாகித்ய அகாடமி மற்றும் ஞானபீடம் போன்ற தேசிய விருதுகள் மற்றும் மாநில இலக்கிய விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு தாங்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது அவர்கள் விரும்பும் மாவட்டத்திலோ கனவு இல்லம் அமைக்க வழிவகை செய்யப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.

சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நூலகம் அமைக்க ரூபாய் 70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்க அரசாணை வெளியிடப்பட்டது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படி பல நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *