லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் மற்றும் பலர் நடித்து வெளியாக இருக்கும் ‘விக்ரம்’ படத்தின் முதல் சிங்கிளான ‘பத்தல பத்தல’ நேற்று வெளியானது. வெளியான ஒரே நாளில் இது 1 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.
கமல்ஹாசனின் பாடல் ஒன்று இவ்வளவு விரைவாக 1 கோடி பார்வைகளைப் பெறுவது இதுவே முதல் முறை. சென்னை வழக்கில் எழுதப்பட்டுள்ள இந்தப்பாடலை கமலஹாசனே எழுதி பாடியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இரசிகர்களை இப்பாடல் கவர்ந்தாலும் சில சர்ச்சைகளையும் ஈர்த்துள்ளது.