கர்நாடகா சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

224 தொகுதிகளுக்கான கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு, காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது/மாநிலம் முழுவதும் 37, 777 இடங்களில், 58545 வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது, 2613 வேட்பாளர்கள் களம் கண்ட தேர்தலில் பதிவான வாக்குகள் 13ந் தேதி காலை 8 மணிக்கு எண்ணப்பட உள்ளன, 5 மணி நிலவரப்படி, கர்நாடக தேர்தலில் 65.58 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
224 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள நிலையில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலானவை எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறும் என்று குறிப்பிடவில்லை. இருப்பினும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் காங்கிரஸுக்கு சற்று கூடுதல் இடம் கிடைக்கும் என்றே குறிப்பிட்டுள்ளன.
டிவி 9 கருத்துக்கணிப்பு:
பாஜக: 88 – 98
காங்கிரஸ்: 99 – 109
மஜத: 21 – 26

ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு:
பாஜக: 85- 100
காங்கிரஸ்: 94 – 108
மஜத: 24 – 32
பிற கட்சிகள்: 2-6

டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு:
பாஜக: 114
காங்கிரஸ்: 86
மஜத: 21
பிற கட்சிகள்: 3

ஜி மேட்ரிக்ஸ் கருத்துக்கணிப்பு:
காங்கிரஸ்: 103 -118
பாஜக: 79 – 94
மஜத: 25 – 33
பிற கட்சிகள்: 21

ஏபிபி நியூஸ் சி வோட்டர்
பாஜக: 66-86
காங்கிரஸ்: 81-101
மஜத: 20-27
பிற கட்சிகள்: 0-3
நியூஸ் நேஷன்
பாஜக: 114
காங்கிரஸ்: 86
மஜத: 21
பிற கட்சிகள்: 3

சுவர்ண நியூஸ் – ஜன் கி பாத்
பாஜக: 94-117
காங்கிரஸ்: 91-106
மஜத: 14-24
பிற கட்சிகள்: 0-2

Leave a Reply

Your email address will not be published.