கார்த்திகை முதல் நாள் – மாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கினர்

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கோயில்கள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள்

கார்த்திகை மாதம் இன்று பிறந்துள்ளதை முன்னிட்டு ஐயப்ப பக்தர்களும் முருக பக்தர்களும் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். சாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோஷம் எங்கும் எதிரொலிக்க ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் புனித நீராடி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா என்ற பக்தி முழக்கம் எங்கும் எதிரொலித்தது.
கார்த்திகை மாதம் பிறந்தாலே மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து பய பக்தியுடன் ஐயப்பனை தரிசிக்க இருமுடியை தலையில் சுமந்து செல்பவர்கள். இன்று கார்த்திகை மாதம் பிறந்து விட்டது. இதையடுத்து தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு தங்களது விரதத்தைத் தொடங்கியுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக சபரிமலைக்கு செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மண்டல பூஜைக்காகவும் மகர ஜோதியை தரிசனம் செய்வதற்காகவும் மாலை அணிந்து 41 நாட்கள் விரதத்தை தொடங்கியுள்ளனர். திருப்பூர், கன்னியாகுமரியில் உள்ள கடைகளில் ஏராளமான பக்தர்கள் கருப்பு, நீல நிற ஆடைகளை வாங்குவதற்கு குவிந்திருந்தனர். மேலும் தாங்கள் அணிவிக்கும் மாலைகளையும் தேர்வு செய்து வாங்கி சென்றனர்.
இதனிடையே சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் 18ஆம் படி வழியாக அனுமதிக்கப்பட்டனர். புதிய மேல் சாந்திகள் பதவியேற்பு நடைபெற்றது. இன்றைய தினம் முதல் வழக்கமான பூஜைகள் தொடங்கின. அடுத்த மாதம் 27ஆம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14ஆம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. சபரிமலையில் பாதுகாப்பு பணிக்காக 13ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *