சமீபத்தில் வலைதளங்களில் தங்கள் ஆசிரியர்கள் தங்களை கட்டாய மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாக மாணவி ஒருவர் புகார் தெரிவிக்கும் காணொளி பரபரப்பாக அனைவராலும் பார்த்து பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில்
கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் குறித்த புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கல்வி நிறுவனங்களில் மதமாற்றத்தை கட்டாயமாக்குவதை தடுக்கக் கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில்: கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் தொடர்பாக புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்கள் தவிர வேறு எங்கும் இது போன்றான புகார்கள் வரவில்லை என தெரிவிக்கப்பட்டது.
கட்டாய மதமாற்றத்தை தடுப்பது தொடர்பான விதிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு என்னனென்ன சிரமம் என தெரிவிக்கும்படி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது.