இந்தியர்கள் கஜகஸ்தான் நாட்டில் 14 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்கலாம்.
கஜகஸ்தானுக்கான பயணம் செய்வது எளிது. ஏனென்றால் இந்த நாட்டிற்கு இந்தியர்கள் செல்ல இப்போது விசா தேவையில்லை. அறிக்கைகளின்படி, இந்தியர்கள் கஜகஸ்தான் நாட்டில் 14 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்கலாம். பல நுழைவு பயணம் என்றால் 180 நாட்களுக்குள் 42 நாட்களுக்கு விசா இல்லாமல் அந்த நாட்டில் தங்கலாம்.
மத்திய ஆசையா நாடுகளில் அதிகம் பார்வையிடப்படாத இந்த நாட்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு தனித்துவமான மற்றும் பல்வேறு வகையான அனுபவங்களைத் தரக்கூடிய பல இடங்கள் உள்ளன. குறிப்பாக இங்கு வரும் மக்கள் கஜகஸ்தானின் வளமான கலாச்சார பாரம்பரியம் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.
முக்கியமாக அல்மாட்டி நகரம், நவீன மற்றும் சோவிய ரஷிய கால கட்டிடக்கலையின் கலவையுடன், துடிப்பான நகர்ப்புற அனுபவத்தை வழங்குகிறது. பண்டைய நகரமான துர்கெஸ்தானில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான கவாஜா அகமது யாசாவியின் கல்லறை உள்ளது. அதையும் தவறாமல் பார்க்க வேண்டும்.
