பத்ரிநாத், கேதார்நாத் யாத்திரை இம்மாத இறுதியில் தொடங்குகிறது. இதனால் பக்தர்கள், செல்ல தயாராகி வருகின்றனர். உத்தரகாண்டில் சார்தாம் என்றழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனித தலங்கள் அமைந்துள்ளன. இந்த புனித தலங்கள் கோடை காலமான மே மாதம் முதல் அக்டோபர் வரை மட்டுமே திறந்திருக்கும். அப்போது மட்டுமே சிவபெருமானை தரிசிக்க முடியும். பனி காலத்தில் மூடப்பட்டிருக்கும். இதனால் பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படும்.
இந்தாண்டுக்கான சார்தாம் புனித யாத்திரைக்கு செல்ல பக்தர்கள் செல்ல தயாராகின்றனர். வரும் ஏப்ரல் 22ம் தேதி அன்று கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோயில்களுக்கு யாத்திரை தொடங்குகிறது. தொடர்ந்து ஏப்ரல் 25ம் தேதி கேதார்நாத் கோயில் யாத்திரை தொடங்க உள்ள நிலையில், ஏப்ரல் 27ம் தேதி பத்ரிநாத் கோவில் யாத்திரை தொடங்குகிறது. கேதார்நாத் கோயிலுக்கு சாலை மார்க்கமாக செல்ல முடியாது. சுமார் 20 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் மலையேறி செல்ல வேண்டும். பக்தர்களின் வசதிக்காக கோவேறு கழுதை சவாரியும், ஹெலிகாப்டர் சேவையும் இயக்கப்படுகிறது. இதன் மூலம் பக்தர்கள் பயணம் செய்யலாம்.