இந்தியாவில் மலக் குழியில் இறங்கி தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்கள் உயிரிழப்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்தும் வகையில், கழிவுகளை மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்களை கொண்டு அகற்றும் தொழில்நுட்பம் உலகிலேயே முதல் முறையாக கேரள மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. நாடு முழுவதும் மலக்குழியில் இறங்கி தூய்மை பணி செய்யும் தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் பல. இதனால் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவது தடை செய்யப்பட்டாலும் இந்த துயரம் தொடர்ந்து வருகிறது.
உலகிலேயே முதல் முறையாக கேரள அரசு தூய்மை பணி செய்யும் ரோபாவை திருச்சூர் மாவட்டதில் குருவாயூரில் முதன்முதலாக அறிமுகம் செய்துள்ளது.
இந்த தொழில்நுட்பம் மூலமாக மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்களே கழிவு நீர் குழிகளில் இறங்கி தூய்மை பணியில் ஈடுபடும். பண்டிகூட் என்று பெயரிடப்பட்டுள்ளா இந்த ரோபோட்டுக்கு மனிதர்களை போன்றே கைகள், மூட்டு பகுதிகள் எல்லாம் இருக்கும். வாட்டர் ப்ரூப் தொழில்நுட்பம் கொண்ட இந்த ரோபோவில் நவீன கேமராக்கள், சென்சார்கள் உள்ளது. அந்த சென்சார்கள் விஷ வாயுவை கண்டுபிடிக்கும். கேரளாவை சேர்ந்த ஜென்ரோபாடிக்ஸ் நிறுவனம் இந்த பண்டிகூட் ரோபோவை அறிமுகம் செய்து உள்ளது.