பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டான்டன் ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த படம் ‘கேஜிஎப் 2’. கன்னடம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது.
மற்ற மொழிகளைப் போல ஹிந்தியிலும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று தொடர்ந்து வசூலை வாரிக் குவிக்கிறது. இதன் முன் சாதனையாக இருந்த ‘டங்கல்’ படத்தின் வசூலை இது முறியடித்ததோடு தற்போது 400 கோடி வசூலைக் கடந்துள்ளது. நேரடி ஹிந்திப் படங்களே 400 கோடி வசூலைத் தாண்டாத நிலையில் ‘பாகுபலி 2, கேஜிஎப் 2’ ஆகிய படங்கள் அங்கு சாதித்து வருவது இந்தி திரையுலகினருக்கு புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.