இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த வாரம் காலமானார். அவரது இறப்புக்குப் பிறகு பல விஷயங்கள் பேசுபொருளாக மாறியுள்ளன. அதில் ஒன்று கோஹினூர் வைரம். அது இந்தியாவிற்கு சொந்தமானது என்று அனைவரும் அறிந்த செய்தி என்றாறாலும், குறிப்பாக யாருக்கு சொந்தமானது, முதலில் யாரிடம் இருந்தது, எங்கிருந்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கடத்தப்பட்டது என்றத் தகவல் மெல்ல கசியத் தொடங்கியிருக்கிறது.
கோஹினூர் தற்போது இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்த கிரிடத்தில் பதிக்கப்பட்டிருக்கிறது. முதன்முதலில் கோல்கொண்டா வைரச் சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்பட்டது. அது ஆறாம் நூற்றாண்டில் சாலுக்கியா ராஜியத்தில் கிடைக்கப்பெற்ற வைரமாகும். பின்னர் காகத்தியா ஆட்சியாளர்கள் சாலுக்கிய வம்சத்தை தன் வசமாக்கியப் பின் வைரம் காகத்தியா ராஜியத்திடம் இருந்தது. அங்கிருந்து அலாவுதீன் கில்ஜி என்னும் டில்லி சுல்தான் அதை கடத்திக் கொண்டு டில்லி செல்ல, அந்த சுல்தானிடமிருந்து முகலாய அரசர்கள் கைப்பற்ற பாபர், ஹுமாயுன், ஷாஜஹான் மற்றும் அவுரங்கஸீப் என இவர்கள் அனைவரின் கைவசம் இருந்து பின்னர் பட்டியாலா மன்னன் ரஞ்சித் சிங் கையில் சேர்ந்தது. மன்னர் ரஞ்சித்சிங் ஆசைப்படி அவர் இறந்ததும் அந்த வைரம் பூரியில் அமைந்துள்ள பூரி ஜெகநாதர் கோயிலுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதனைப் பொருட்படுத்தாத பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அதனை இங்கிலாந்திற்கு கடத்திச் சென்றுள்ளனர்.
கோஹினூர் வைரம் 109காரட், 21.6கி எடை கொண்டது. இப்போது அது பூரி ஜெகநாதருக்கு சொந்தமானது. அதனை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒடிஷா அமைப்புகள் கூறிவருகின்றன. 2016ம் ஆண்டு தாங்கள் அனுப்பிய கடிதத்திற்கு பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து பதில் கடிதமும் வந்திருப்பதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள்.