கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணர் அவதரித்த தினத்தை ஜென்மாஷ்டமி என்று வடக்கிலும், கோலாஷ்டமி என்று தெற்கிலும் இன்னும் பிற பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்துப் பண்டிகைகளில் இது மிக மிக முக்கியமான நாளாகும். ஆவணி மாதம் எட்டாம் நாள், ரோகினி நட்ச்சத்திரத்தில் இத்திருவிழா கொண்டாடப்படும்.
விஷ்ணு அவதாரமான கிருஷ்ணர் மதுராவில் தேவகிக்கும், வாசுதேவருக்கும் மகனாக இவ்வுலகில் அவதரித்த கிருஷ்ணர், மாமன் ஹம்சனின் கொடூர குணத்தால் கொலை செய்யப்படுவார் என்ற அச்சத்தால் தாய் யசோதாவிடம் வளர்ந்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. சிறு வயது முதலே குறும்பில் விஞ்சிய கிருஷ்ணன் தாய் யசோதை வீட்டில் வைத்திருக்கும் பானையை உடைத்து வெண்ணை திருடிப் தின்பான். மதுராவில் பிறந்த கிருஷ்ணர் பின்னாளில் சிறுவதை பிருந்தாவனத்தில் கழித்தான்.
கண்ணன் பிறந்த மதுராவிலும், பிருந்தாவனத்திலும் ஜென்மாஷ்டமி மிகக் கோலாகலமாக கொண்டாடுவார்கள். மஹராஷ்ட்ரா, அஸ்ஸாம், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் இப்படி வெகு விமர்சியாக கொண்டாடப்படும். தெருவெங்கும் ஆடல் பாடலென திரியும் மக்கள் கண்ணனுக்கு மிகவும் பிடித்த பக்ஷணங்கள் செய்து படைப்பர். அதேப் போல வெண்ணைப் பானையை உயரத்தில் அதை மனித பிரமிட் போல ஏறி உடைக்கும் நிகழ்வும் நடைபெறும். கேரளாவில் குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோயில் கோலாஷ்டமி மிகவும் பெரிதாக கொண்டாடப்படும். கிருஷணருக்கு ராதா, ருக்மணி, சத்யபாமா போன்றவர்கள் மனைவிகளாக புராணங்களில் அறியப்படுகிறார்கள்.
பெரும்பாலும் கிருஷ்ணர் ராதை ருக்மணியோடு காட்சியளிப்பார். ஆனால் ஒடிசா மாநிலம் பூரி நகரில் ஜெகநாதர் என்ற வடிவில் அண்ணன் பலராமன், தங்கை சுபத்ராவோடு காட்சியளிப்பார்.இக்கோயிலின் தேரோட்டம் உலகப்புகழ் பெற்றது.