இலங்கையில் கடும் அமைதியினையும் பொருளதார நெருக்கடியும் நிலவி வருகிறது. இது நாள் வரையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்த பொதுமக்களுக்கும் அரசு தரப்புக்கும் இடையே கடந்த இரண்டு தினங்களாக கடுமையான மோதல் நிகழ்ந்து வருகிறது. பிரதமரின் இல்லம், அமைச்சர்களின் வீடுகள் மற்றும் உடைமைகள் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டது.
இந்நிலையில் அந்நாட்டு பாதுகாப்புத்துறை சார்பில் முப்படைகளுக்கு உத்தரவிட்டு வெளியாகியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: பொதுசொத்துக்களை திருடுவோரை கண்டதும் சுட்டுத்தள்ள வேண்டும். மேலும் சக குடிமக்களையும் தாக்குவோரையும் சுட்டுத்தள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.”