செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மிகப்பெரிய பள்ளம் – புகைப்படத்தை வெளியிட்ட நாசா

உலகம் செய்திகள் வட அமெரிக்கா

விண்வெளி ஆய்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான சாட்சியாக செவ்வாய்கிரகத்தில் பெரிய பள்ளம் தோன்றியுள்ளது. இது பெரிய சூரிய குடும்பமான செவ்வாயில், ஆய்வின் போது முன் எப்போதும் இல்லாத வகையில் கண்டறியப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் 150 மீட்டர் அகலமான ஒரு பள்ளத்தை உருவாக்கியுள்ளது வேன் அளவுக்கு பெரியதான பொருள் ஒன்று. மேலும் இந்த பள்ளம் உருவானதில் 35 கி.மீக்கு அப்பால் கழிவுகள் தூக்கி எறியப்பட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி முகமையின் இன்சைட் லேண்டரில் நில‍ அதிர்வு மானியை உபயோகித்து இந்த நிகழ்வை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
நாசாவின் செவ்வாய் கிரக ஆய்வு சுற்றுப்பாதை (எம்ஆர்ஓ)-வில் இருந்து கிடைக்கப்பெற்ற படங்கள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த செயற்கை கோளானது செவ்வாய்கிரகத்தை தொடர்ந்து படம் எடுத்து வருகிறது. செவ்வாய் வெளியில் முக்கியமான அதிர்வுகள் நேரிடுவதற்கு முன்பும், பின்பும் படங்களை இது உருவாக்குகிறது. இன்சைட்டில் இருந்து குறிப்பிட்ட நேரம் மற்றும் எதிர்பார்க்கப்படும் கோணம் மற்றும் தூரம் (3500 கி.மீ)ஆகியவற்றையும் தருகிறது.
“முன் எப்போது அறிந்ததையும் விடவும் இது பெரிய புதிய பள்ளமாக இருக்கிறது,” என்கிறார் பிரவுன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் இங்க்ரிட் டௌபர்.”இது 500 அடி அகலமாக உள்ளது. விண்கற்கள் இந்த கிரத்தை அனைத்து நேரங்களிலும் தாக்கிக் கொண்டே இருந்தாலும், செவ்வாயில் உருவான இதற்கு முன்பு நாம் பார்த்த வழக்கமான புதிய பள்ளங்களை விட இந்த பள்ளமானது 10 மடங்கு பெரியதாகும்.
“இவ்வளவு பெரிய அளவுடன் கூடிய பள்ளம், ஒவ்வொரு சில பத்தாண்டுகளுக்கு ஒருமுறை, இந்த செவ்வாய்கிரகத்தில் எங்கேனும் ஒரு பகுதியில் தோன்றும் என்று நாங்கள் நினைக்கின்றோம். ஒரு தலைமுறைக்கு ஒருமுறையாகக்கூட அது இருக்கலாம். எனவே இந்த நிகழ்வைக் காண முடிந்தது மிகவும் உற்சாகமாக இருந்தது.” என்கிறார் இங்க்ரிட் டௌபர்.

Leave a Reply

Your email address will not be published.