இமானுவேல் சேகரன் தமிழத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்தார். பிரிட்டிஷ் ஆட்சியில் நடக்கும் கொடுமைகளை தட்டிக் கேட்க சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். இமானுவேல் பள்ளர் சமுதாயத்தில் பிறந்ததால், தனது சமுதாய மக்களை மிகவும் தாழ்வாக நடத்துவதால் அதற்கு எதிராக தீவிரமாக போராடியவர். இந்திய தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்.
1957ம் ஆண்டு நடைபெறவிருந்த ஓர் இடைத்தேர்தலின் போது பள்ளர் சமுதாயத்தைச் சார்ந்த சிலருக்கும், தேவர் சமுகதாயத்தைச் சார்ந்த சிலருக்கும் நடந்த சாதி மோதல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. முத்துராமலிங்கத் தேவர் ஒரு கூட்டத்திற்கு வந்தபோது இமானுவேல் எழுந்து நின்று அவருக்கு மரியாதை தரவில்லை என்று அவரைத் தாக்கி பின்னர் கொலை செய்யப்பட்டார். இதன்பின் ஏற்பட்ட கலவரத்தில் கிட்டதட்ட 40க்கும் மேற்பட்ட பள்ளர் சமுதாய மக்கள் இறந்து போயினர்.
தேவேந்திர குல வேளாளர் மக்கள் செப்டம்பர் 11 இவரது நினைவு தினத்தை ஆண்டு தோறும் இமானுவேல் ஜெயந்தி என்று நினைவேந்தல் செய்வது வழக்கம். 2010ம் ஆண்டு இந்திய அரசு இமானுவேல் சேகரன் அவர்களுக்கு அஞ்சல் தலை வெளியிட்டு பெருமைப்படுத்தியது.