தன்பாலின ஈர்ப்பு திருமணங்களை அங்கீகரிக்கக் கோரும் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தன்பால் ஈர்ப்பாளர்களின் திருமணங்களை சட்ட ரீதியான அங்கீகரிக்க கேட்கும் கோரிக்கை மேட்டிமைவாத மக்களது பார்வையாக மட்டுமே உள்ளது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தன்பாலீர்ப்பு திருமணங்களை அங்கீகரிக்கும் கோரும் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக, இந்த வழக்கில் பதில் மனுவைத் தாக்கல் செய்த மத்திய அரசு, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமணத்தின் புனிதத் தன்மைக்கு அச்சுறுத்தலாக இது அமையும் என்று தெரிவித்தது.இந்த வழக்கில் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், ஒருபுறம் தன்பாலீர்ப்பு மக்களின் உயிருக்கும் உடல்சார் உரிமைக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும், அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட கூடாது. அதே சமயம், ஆண் பாலுக்கும், பெண் பாலுக்கும் இடையிலான திருமணங்கள் மட்டுமே சட்டம் விதித்துள்ள நெறிமுறைப்படி அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. எனவே, சட்டப் பிரச்னை அடங்கியுள்ள வழக்காக இது இருக்கிறது. எனவே, இதற்கு தீர்வு காண்பதற்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்படுவதாக கடந்த ஏப்ரல் 15ம் தேதி அறிவித்தது.