தமிழ் சினிமாவின் தந்தை என்று கூறப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 93வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய சிவாஜி கணேசனின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கடந்த 1952 ஆம் ஆண்டு பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த படத்திற்கு கலைஞர் கருணாநிதி வசனம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜி கணேசனின் நடிப்பு மற்றும் கருணாநிதியின் வசனம் இந்த படத்தை மிகப் பெரிய வெற்றிப் படமாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
பராசக்தி படத்தின் வெற்றிக்குப் பின்னர் அவர் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தார் என்பதும் அவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜிகணேசனுடன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் கமல்ஹாசன் ரஜினிகாந்த் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு உள்பட பலர் நடித்தனர். அதேபோல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் சிவாஜிகணேசனுடன் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கடைசியாக கடந்த 1993 ஆம் ஆண்டு பூப்பறிக்க வருகிறோம் என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பதும் அதுவே அவரது கடைசி படமாக அமைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2001ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சிவாஜிகணேசன் மறைந்தார். சிவாஜி கணேசனின் உடல் மறைந்தாலும் அவரது நடிப்பு தமிழ் சினிமா உள்ளவரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார் என்பதும் அவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் தேசிய விருது பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
