தன்பால் ஈர்ப்பு தம்பதிகள் திருமணம் செய்துகொள்ளும் செயல் இந்திய குடும்ப அமைப்புக்கு எதிராகவுள்ளது என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஓர் பாலினத் திருமணங்களுக்கு சட்ட ரீதியாக ஒப்புதல் வழங்கக்கோரி தொடக்கப்பட்ட வழக்கில் மத்திய அரசு சார்ப்பில் இருந்து பிரமானப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஓர் பாலினத் திருமணங்கள் இந்திய குடும்ப அமைப்புகளுக்கு எதிராக உள்ளது என்றும் தனிநபர் சட்டத்திற்குள்ளாக வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய குடும்ப வழக்கப்படி, பெண் என்பவள் மனைவியாகவும், ஆண் என்பவர் கணவனாகவும் இருக்க வேண்டும். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எனும் அமைப்பே குடும்ப அமைப்பாக செயல்பாட்டில் இருந்து வருகிறது. வெளிநாட்டைப் பொருத்தவரை அமெரிக்க போன்ற சில நாடுகள் தன்பாலின திருமணத்திற்கு சட்டரீதியான அங்கீகாரம் கொடுத்துள்ளன. அதே போல், இந்தியாவிலும் சட்டரீதியான அங்கீகாரம் கேட்டு இந்த வழக்கு தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில் நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.