பக்ரைன் நாட்டில் லைட்ஸ் ஆஃப் கைண்ட்னெஸ் சார்பாக ஆதரவற்றோர்களுக்கு உதவி

அரபு நாடுகள் உலகம் கடந்த நிகழ்ச்சிகள் சமூக சேவை சுற்றுலா செய்திகள் நிகழ்வுகள்

லைட்ஸ் ஆஃப் கைண்ட்னெஸ் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பாக பஹ்ரைன் ஹித் பகுதி் புனர்வாழ்வு மையத்தின் சிறப்புத் தேவையுடையவர்களுக்கு அவர்களின் மையத்தில் வைத்து பரிசுப் பொட்டலங்கள் மற்றும் புத்துணர்வுப் பொருட்கள் விநியோகிக்கபட்டது.
கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு என்று பண்டிகை நாட்கள் வருவதால் அவர்களுக்கு உதவ இந்த தன்னார்வ அமைப்பு முன்வந்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய நிறுவனத்தின் மையத் தலைவரும் பொதுச் செயலாளருமான பாஸ்மா சலே புராதா, மனிதநேய ஆர்வலர் ஹுஸ்னியா கரிமி மற்றும் ஆஸ்டர் கிளினிக்கின் மனிதவளப் பிரிவின் தலைவி் திவ்யா மேனன், சமூக சேவகர் சுனில் பானு மற்றும் லைட்ஸ் ஆஃப் கைண்ட்னெஸ் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *