அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரக அலுவலகம் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான வருடாந்திர அச்சுறுத்தல் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையில், சீனா, ரஷ்யா, வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு தீவிர அச்சுறுத்தலாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்து உள்ளது. கிழக்கு ஆசியாவில் முக்கிய சக்தியாகவும், உலகில் ஆற்றல் வாய்ந்த நாடாக சீனா தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்கிறது.
பேரழிவை உண்டாக்கும் ஆயுதங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சீனா தயாரிப்பதாக எச்சரித்துள்ளது. சீனா- ரஷ்யா இடையேயான உறவால், பாதுகாப்பு ஒருங்கிணைப்பு, ஆயுத விற்பனைகள் மற்றும் கூட்டு பயிற்சிகள் போன்றவை அமெரிக்காவுக்கு எதிரான அச்சுறுத்தலாக உள்ளன. ஈரான் நாடும், தொடர்ந்து அமெரிக்க மக்களுக்கு நேரடி அச்சுறுத்தலாக இருக்கும். தனது அணு ஆயுத திட்டங்களை விரிவுப்படுத்தும் என எச்சரித்துள்ளது. வடகொரிய ராணுவமும் தனது அணு ஆயுதத்தால், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு தீவிர அச்சுறுத்தலாக உள்ளது என்று அறிக்கை எச்சரிக்கை விடுத்து உள்ளது.