சென்னைக்கு நீர் வழங்கும் குடிநீர் ஆதாரங்கள் மற்றும் அதன் விவரங்கள்

செய்திகள் தமிழ்நாடு மற்றவை

சென்னை நகரம் வேகமாக வளர்ந்து வரும் மிக முக்கிய நகரமாகும். தென்னிந்தியாவை இணைக்கும் புள்ளியாக சென்னை நகரம் விளங்குறது. சென்னையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம், ரயில் நிலையம், சர்வதேச விமான நிலையம் மற்றும் துறைமுகம் என சகல வசதிகளும் உள்ளதால் பிற இடங்களில் இருந்து சென்னையில் குடியேறும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வேலை நிமித்தமாக சென்னைக்கு குடிப்பெயரும் மக்களின் எண்ணிக்கை மற்றும் சென்னையின் பூர்வக்குடிகள் என கிட்டத்தட்ட 1கோடி அளவிற்கு தினந்தோறும் மக்கள் சென்னை வந்து செல்கின்றனர்.
இவ்வாறு மக்கள் தொகைப் பெருக சென்னை நகரத்தின் குடிநீர் தேவையும் வானளவிற்கு உயர்கிறது.
சென்னைக்கு நீர் வழங்கும் குடிநீர் ஆதாரங்கள் எவையெவை எனப் பார்ப்போம். சென்னைக்கு நீர் ஆதாரமாக இருக்கும் மூன்று முக்கிய ஏரிகள் செம்பரபாக்கம், புழல் மற்றும் பூண்டி ஏரிகள் ஆகும். இந்த மூன்று ஏரிகளும் சென்னைக்கு நகருக்கு மட்டும் குடிநீர் ஆதாரங்ளாக பயன்பட்டு வருகின்றன. இதைத் தவிர சோழவரம் ஏரியும் சென்னையின் குடிநீர் தேவைக்கு உதவுகிறது. இதுபோக வீராணம் ஏரியும் சென்னை மக்கள் தாகத்தைத் தீர்க்க முக்கியமாக நீர் ஆதாரமாக உள்ளது. புதிய வீராணம் என்ற திட்டத்தில் குழாய்கள் மூலம் சென்னை நீர் வந்தடைகிறது. மற்ற ஏரிகளில் இருந்து குடிநீர் லாரிகள் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் நீர் விநியோகிக்கப்படுகின்றன.
இது தவிர தெலுங்கு கங்கைத் திட்டத்தின் மூலமாகவும் சென்னை நகரம் குடிநீர் பெறுகிறது. ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா நதியிலிருந்து ஆண்டுதோறும் சென்னைக்கு நீர் வாய்கால்கள் மூலம் வந்தடைகிறது.
ஆந்திரா ஸ்ரீசைலம் அணையிலிருந்து 400கி.மீ தொலைவுக்கு மேல் பயணித்து நீர் தமிழகத்தின் பூண்டி நீர்தேக்கத்திற்கு வந்து அங்கிருந்து இணைப்பு கால்வாய்கள் மூலம் மற்ற ஏரிகள் செம்பரபாக்கம், புழல் மற்றும் சோழவரம் ஏரிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.