மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 26 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து கலைத்துறை சேவைக்காக தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த மருத்துவர் நளினி பார்த்தசாரதிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மாசி சடையன்
மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வானது குறித்து பாம்புபிடி வீரர் மாசி சடையன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், இதுவரை எண்ணிலடங்கா பாம்புகளை பிடித்திருக்கிறோம். இந்த விருது பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார். வடிவேல் கோபால் மகிழ்ச்சி
தொடர்ந்து வடிவேல் கோபால் கூறுகையில், எங்களுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார். அதேபோல் இவர்கள் இருவரும் விஷ முறிவு மருந்துகள் கண்டறியவதிலும் பங்காற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.