ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் மதுரை மாநகரம் – கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியீடு

அரசியல் கலை / கலாச்சாரம் செய்திகள் தமிழர் விளையாட்டு தமிழ்நாடு நிகழ்வுகள் மண்மணம் வரும் நிகழ்ச்சிகள் விவசாயம்

தை பொங்கலுக்கு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போன்ற ஊர்களில் நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு நெறிமுறைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பாளர்கள், அனைத்து துறை அலுவலர்கள் என அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி, மற்றும் பரிசோதனை நெகடிவ் சான்று தேவை.

ஜல்லிக்கட்டு காளையுடன் உரிமையாளர், உதவியாளர் என இருவருக்கு மட்டுமே அனுமதி
பார்வையாளர்களும் தடுப்பூசி மற்றும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்
ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளில் 300 மாடுபிடி வீரர்கள் வரை பங்கேற்கலாம்
எருதுவிடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்துகொள்ள அனுமதி
ஜல்லிக்கட்டு காளைகள் ஏதேனும் ஒரு ஊரில் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படும், ஒரு மாடுபிடி வீரர் ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும்
madurai.nic.in என்ற இணையதளத்தில் வீரர்கள், மாடு உரிமையாளர்கள் பதிவு செய்யவேண்டும்
இணையதளத்தில் புகைப்படம், வயது சான்று, கொரோனா தடுப்பூசி சான்றிதழை பதிவேற்ற
வேண்டும்

சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின் தகுதியானவர்களே டோக்கன் பதிவிறக்கம்
செய்ய இயலும். டோக்கன் வைத்திருக்கும் நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

Leave a Reply

Your email address will not be published.