சிக்கிம் மாநிலம் நாதுலா எல்லை அருகே ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஒரு குழந்தை உட்பட 7 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளார். கடல்மட்டத்திலிருந்து 4,310 மீட்டர் உயரத்தில் காங்டாக்கை நாது லாவுடன் இணைக்கும் ஜவஹர்லால் நேரு சாலையில், 15வது மைலில் நேற்று மதியம் 12 மணியளவில் திடீர் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. பனிச்சரிவு ஏற்பட்டபோது அப்பகுதியில் 150-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ஒரு குழந்தை உட்பட 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும்பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. பனிச்சரிவில் சுற்றுலா பயணிகள் பலர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.