மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய கார் மாடல் EQS இந்தியாவில் அறிமுகமாகியிருக்கிறது.
புதிய பென்ஸ் கார் பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் செடான் மாடல் ஆகும்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கடந்த மாதம் இந்திய சந்தையில் புதிய EQS சீரிசை அறிமுகம் செய்து இருந்தது. தற்போது இந்த பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் செடான் மாடலின் புது வேரியண்ட் இந்தியாவில் EQS 580 எனும் பெயரில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த கார் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQS 580 மாடலில் 107.8 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை 523 ஹெச்பி பவர், 856 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன. மேலும் இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 770 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.
மெர்சிடிஸ் AMG-EQS 53 மாடலுடன் ஒப்பிடும் போது EQS 580 மாடலில் சற்றே எளிமையான டிசைன் வழஹ்கப்படும் என தெரிகிறது. இந்த காரில் பிளான்க்டு-அவுட் கிரில், 21 இன்ச் அளவில் வீல்கள், இருபுறமும் ட்வீக் செய்யப்பட்ட பம்ப்பர்கள் வழங்கப்படுகின்றன.
காரின் உள்புறம் பென்ஸ் நிறுவனத்தின் பாரம்பரியம் மிக்க ஹைப்பர் ஸ்கிரீன்- டேஷ்போர்டின் முழு அளவுக்கு நீள்கிறது. இந்திய சந்தையில் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQS 580 மாடலுக்கு நேரடி போட்டியை ஏற்படுத்த எந்த காரும் விற்பனை செய்யப்படவில்லை.
இதற்கு முந்தைய மாடலை விட இந்த மாடல் அளவில் பெரிதாகவும், விலை 1.44 கோடியாவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட விலை குறைவு. S வகை கார் 1.60 கோடிக்கு விற்பனையானது.