மூலிகையே நீண்ட ஆயுளின் இரகசியம் – அன்னம்மா அப்புக்குட்டி பாட்டி

உலகம் மலேசியா

மலேசியாவின் மிக வயதான பெண்மணியான அன்னம்மா அபுகுட்டி நேற்று தமது 111வது பிறந்தநாளைக் கொண்டாடியபோதும் தமது பழைய சாதனையை புதுப்பித்துக் கொண்டார்.

தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், தச்சம்பாடி எனும் சிற்றூரில் பிறந்த திருவாட்டி அன்னம்மா இரண்டாம் உலகப் போரின்போது மலாயாவிற்கு இடம்பெயர்ந்தார்.

தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், தச்சம்பாடி எனும் சிற்றூரில் பிறந்த திருவாட்டி அன்னம்மா இரண்டாம் உலகப் போரின்போது மலாயாவிற்கு இடம்பெயர்ந்தார்.

இப்போது பேராக் மாநிலம், பத்து காஜாவில் நான்கு பிள்ளைகள், 17 பேரப் பிள்ளைகள், ஏழு கொள்ளுப் பேரப்பிள்ளைகளுடன் இவர் வசித்து வருகிறார்.
இடது கண் பார்வையை இழந்து விட்ட இவர், தற்போது சக்கர நாற்காலியிலேயே முடங்கிவிட்டார். ஆயினும், தமிழ், மலாய் மொழிகளில் நன்கு பேசும் இவருக்கு நினைவாற்றலும் நன்றாகவே இருக்கிறது.

இத்தனை வயதாகிவிட்டாலும் உடற்குறை இருந்தாலும் அக்கம் பக்கத்தினரும் நோயாளிகளும் சுகாதாரம், நீண்டகாலம் வாழ்வது குறித்த ஆலோசனைகளைப் பெற தம் தாயாரை நாடி வருவது தொடர்வதாக இவரின் மகன் திரு எம்.சுப்பிரமணியம், 74 வயது பெருமிதத்துடன் கூறினார்.

மூலிகை மருத்துவத்தோடு பேறுகால மருத்துவம், உடலைத் தளர்த்துதல், பச்சை குத்துதல் போன்றவை தொடர்பிலும் அன்னம்மா ஆலோசனைகள் அளித்து வருகிறார்.

“இங்குள்ள மக்கள் எங்கள் தாயாரை ‘பாட்டி அன்னம்மா’ என அன்போடு அழைக்கின்றனர்,” என்றார் திரு சுப்பிரமணியம்.

நோன்பு, தியானம், வீட்டிலேயே வளர்த்துவரும் மூலிகைகள் ஆகியவையே தம் தாயாரின் நீண்ட ஆயுளின் ரகசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *