கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவானது. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி வரவேற்பு பெற்றது.
இந்தப் படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியிட உள்ளனர். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இடம் பெற்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். மேலும் யூடியூப் ட்ரெண்டிங்கிலும் பொன்னியின் செல்வன் 2 பட ட்ரெய்லர் முதலிடத்தை பெற்றுள்ளது.