இயக்குனரும் நடிகருமான மனோபாலா இன்று காலை காலமானார்.

இந்தியா சினிமா சின்னத்திரை செய்திகள் செய்திமடல் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆன மனோபாலா இன்று உயிரிழந்தார் . 08 டிசம்பர் 1953 இல் பிறந்த இவர் பல முக்கியமான தமிழ் திரைப்படங்களில் துணைநடிகராக குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

1970 களின் முற்பகுதியில் தமிழ் சினிமாவில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், பாரதிராஜாவிடம் 1979 ஆம் ஆண்டு வெளியான புதிய வாழ்த்துகள் திரைப்படத்தில் உதவி இயக்குநராக முதன்முதலில் அறிமுகமானார். நடிகர் மனோபாலா கல்லீரல் பிரச்சனை காரணமாக இன்று (புதன்கிழமை) காலை அவரது இல்லத்தில் காலமானார். இதற்கு முன்னர் ஜனவரி மாதம் நெஞ்சுவலிக்கு சிகிச்சை பெற்றுள்ளார்.

துபாயில் நடந்த 4வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது இவர் சதுரங்க வேட்டை திரைப்படத்திற்காக 2015 இல் சிறந்த அறிமுக தயாரிப்பாளர் விருதினைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது மட்டும் அல்லாமல் தி லயன் கிங் படத்தின் தமிழ் பதிப்பில் சஸு கதாப்பாத்திரத்திற்கு இவர் பேசிய டப்பிங் இன்றும் பல ரசிகர்களுக்கு மறக்க முடியாத நினைவாகும்.

இவரது மறைவிற்கு திரை உலகத்தினரும் அவரது ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இப்பதிவின் மூலம் பல நகைச்சுவை காட்சிகள் மூலம் நம்மை சிரிக்க வைத்த அவருக்குத் தமிழ் உள்ளங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published.