பாகுபலி2 படத்துக்கு அடுத்ததாக, ஆர்ஆர்ஆர் என்கிற படத்தை எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கினார். ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் தயாரித்தது. ஜூனியர் என்டிஆர், ராம் சரண், பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரியா சரண் போன்றோரும் நடித்தார்கள்.
உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் அதிகமான வசூலை அடைந்தது. ஆர்ஆர்ஆர் 2-ம் பாகத்தின் கதையைத் தனது தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதி வருவதாக உறுதி செய்தார் இயக்குநர் ராஜமெளலி.
தி டெர்மினேட்டர், ட்ரூ லைஸ், டைட்டானில், அவதார், அவதார் 2 போன்ற உலகளவில் வசூலைக் குவித்த படங்களை இயக்கியவர் ஜேம்ஸ் கேம்ரூன். கடந்த வருடம் வெளியான தெலுங்குப் படமான ஆர்ஆர்ஆர்-ஐ ஜேம்ஸ் கேமரூன் பாராட்டி பேசியிருந்தார்.
இந்நிலையில் ஜேம்ஸ் கேமரூன் ராஜமௌலி பேசியது பேசிய விடியோ வெளியாகியுள்ளது.
டெர்மினேட்டர் முதல் டைட்டானிக் வரை உங்களது எல்லாப் படங்கள் மிகவும் பிடிக்கும்” என ராஜமௌலி கூறினார்.
“உங்களது படங்களின் கதாபாத்திரங்களை பார்க்கும்போது உணர்ச்சி மிகுந்ததாக உள்ளது. நெருப்பு, நீர் என நீங்கள் படத்தினை சரியாக செட் அப் செய்துள்ளீர்கள் என கேம்ரூன் கூறினார். இதற்கு ராஜமௌலி விருதை விடவும் இந்த வார்த்தைகள் மிகவும் பெரியது எனக் கூறினார்.
இறுதியாக, “இங்கே (ஹாலிவுட்டில்) படம் எடுக்க வேண்டுமானால் சொல்லுங்கள் பேசலாம்” என கேமரூன் கூறியுள்ளார்.