மைக்ரோ சாப்ட் சத்திய நாதெல்லா மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இருவரும் டில்லியில் சந்தித்து பேசினர்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக , இந்திய வம்சாவளியை சேர்ந்த சத்ய நாதெல்லா உள்ளார். உலகின் தலைசிறந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் தலைமை பொறுப்புகளில் உள்ளனர். இந்தியாவில் பெங்களூரு, மும்பை, டில்லி ஆகிய நகரங்களில் நடக்கவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இந்தியா வந்துள்ளார்.
இந்நிலையில் புதன் கிழமையன்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, சத்ய நாதெல்லா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அரசு நிர்வாகத்தில் டிஜிட்டல் ஆதிக்கம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.