காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் நாடு தழுவிய பாரத் ஜோடோ யாத்திரை இன்று டில்லியில் ஆரம்பித்தது. அதில் ராகுல் காந்தியோடு கமல்ஹாசன் இணைந்து யாத்திரையை மேற்கொண்டார்.
அரசியலமைப்பு சட்டத்திற்கு நெருக்கடி வரும்போது எந்த கட்சி ஆட்சியாக இருந்தாலும் போராட்டத்தில் இறங்குவேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்றுதான் நினைத்தேன், ராகுல் தமிழில் பேச சொன்னார். தேசிய ஒற்றுமை பயணத்தில் 2 கொள்ளுப்பேரன்கள் இணைந்து நடக்கிறோம். எனது அரசியல் பயணம் மக்களுக்காக தொடங்கியது, எனக்காக அல்ல. எந்த ஒரு நெருக்கடி நம் அரசியல் அமைப்புக்கு வந்தாலும் நான் தெருவில் வந்து நிற்பேன். இந்திய குடிமகனாக ராகுலின் தேசிய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்றுள்ளேன். ராகுல் காந்தி யாத்திரையில் பங்கேற்பது அரசியலில் பாதிப்பை ஏற்படும் என்று பலர் கூறினார்கள். ஆனால் எனது மனசாட்சியை கேட்டு யாத்திரையில் பங்கேற்பது என முடிவு செய்தேன். என்னை பொறுத்தவரை இந்திய ஒற்றுமை பயணம் என்பது ஒரு தொடக்கம் தான். இந்தியாவின் கடந்த கால பெருமைகளை மீட்டெடுக்க இதுபோன்ற பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
நேற்று திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி யாத்திரையில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.