தமிழ்நாடு குஜராத் பிணைப்பு குறித்து மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

அரசியல் இந்தியா கலை / கலாச்சாரம் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ்நாடு நிகழ்வுகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மண்மணம் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றும் போது காசி தமிழ்ச் சங்கமம் குறித்துப் பேசினார். நாம் நமது கலாச்சாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்.அதற்காக தமிழ்நாடு மற்றும் காசிக்கும் இடையே இருக்கும் பழங்கால உறவுகளைக் கொண்டாடும் வகையில் காசி தமிழ்ச் சங்கமம் கொண்டாடப்பட்டது. காசியும் தமிழ்நாடு பல நூற்றாண்டுகள் கலாச்சார உறவுகளைக் கொண்டிருந்தன. சவுராஷ்டிராவுக்கும் தமிழர்களுக்கும் இடையே ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான தொடர்பு இருக்கிறது. குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதியில் இருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, பலர் தமிழகத்தில் குடியேறினார்கள். அவர்களை நாம் ‘சவுராஷ்டிரி தமிழர்’ என அழைக்கிறோம். இன்றும் சவுராஷ்டிரா மக்களின் உணவு முறை, பழக்க வழக்கத்தைப் பலரும் பின்பற்றுகின்றனர். அதன்படி வரும் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நடைபெற உள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *