திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியைச் சேர்ந்த விக்னேஷ் கிருஷ்ணா என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் திரையரங்கு ஒழுங்குமுறை சட்டம் மற்றும் விதிகள், உரிம நிபந்தனைகளை, திரை உரிமையாளர்கள் பலர் பின்பற்றுவது இல்லை. விதிகளை மீறி காலை 9:00 மணிக்கு முன், சிறப்பு காட்சிகள் திரையிடப் படுகின்றன. அதற்கு, அதிக கட்டணமும் வசூலிக்கப்படுகின்றது, வரி ஏய்ப்பும் நடக்கிறது.
இதுகுறித்து, உள்துறைச் செயலர், டி.ஜி.பி., போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, உரிம நிபந்தனைகளை மீறும் திரையிடல்களை தடுக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சத்தியநாராயண பிரசாத், விதிமுறைகளை மீறி, எட்டு காட்சிகள் வரை திரையிடப்படுவதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே, விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என் வலியுறுத்தினர். மனுவுக்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்க, அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.