விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கோலாகலமாக தொடங்கியது.
விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுவரை ஒளிபரப்பான 5 சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்தாண்டு ஓடிடி தளத்திற்கென பிரத்யேகமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. பிக்பாஸ் என்றாலே நினைவுக்கு வருவது பிரமாண்ட வீடு தான்.
அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் 19 போட்டியாளர்கள் குறித்த அதிகாரபூர்வ புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் தொகுப்பாளர் மற்றும் சின்னத்திரை நடிகை மகேஷ்வரி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்டன், சத்யா தொடர் புகழ் ஆயிஷா, மைனா நந்தினி, ரச்சிதா மகாலட்சுமி, ராபர்ட் மாஸ்டர், நடிகை ஸ்ரீநிதி, சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமான ஜி.பி.முத்து, இலங்கையைச் சேர்ந்த தொகுப்பாளர் ஜனனி, நடிகை விசித்ரா போன்றோர் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.