ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறப்போவதாக பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தோனி; இது என் கடைசி தொடரல்ல என விளக்கம்

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் முதன்மை செய்தி விளையாட்டு

ஐபிஎல் தொடருடன் சிஎஸ்கே கேப்டன் தோனி ஓய்வு பெறுவதாக எழுந்த வதந்திகளுக்கு, அவர் அளித்த பதிலால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
லக்னோவில் நடைபெற்று வரும் ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கேப்டன் தோனி, பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அப்போது பேசிய தொகுப்பாளர் டேனி மோரிசன், இது உங்கள் கடைசி ஐபிஎல் போட்டி என கூறப்படும் நிலையில், ரசிகர்களின் ஆதரவால் மகிழ்ச்சியடைகிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கூலாக பதிலளித்த தோனி, ”இது தான் எனது கடைசி ஐபிஎல் என்று நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள். ஆனால், நான் முடிவு செய்யவில்லை” என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதனையடுத்து ரசிகர்களை நோக்கி பேசிய டேனி மோரிசன், தோனி மீண்டும் வருவார் என்றும், அடுத்த ஐபிஎல் தொடரிலும் பங்கேற்க வருவார்’ என்றும் கூறினார். தோனி இந்த ஐபிஎல் சீசனுடன் ஓய்வு பெற்றுவிடுவார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் நீண்ட நாட்களாக கருத்து தெரிவித்து வந்த நிலையில், எம்.எஸ்.தோனியின் இந்த பதில் ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சக்கட்ட நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.