கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, தனது பிறந்த நாளை, மனைவியுடன் கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு, இன்று 43-ஆவது பிறந்த நாள். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட தோனி, ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், தனது பிறந்த நாளை மனைவி சாக்ஷியுடன் கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடினார். இருவரும் மாறி மாறி கேக்கை பரிமாறிக் கொண்டனர். அப்போது, தோனியின் காலைத் தொட்டு வணங்கிய தனது மனைவியை, ஆசிர்வாதம் செய்வது போல அவர் சைகை செய்தார்.
ஐசிசியின் அனைத்து கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமை பெற்றிருக்கும் தோனிக்கு அவரது பிறந்த நாளையொட்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
